அசோக் லவாசா தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார்.!
இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார்.
அந்த ராஜினாமா கடிதத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தன்னை தேர்தல் ஆணையர் பதிவில் இருந்து விடுவிக்கும்படி தெரிவித்துள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாலா நியமனம் செய்யப்பட்டதையடுத்து, தேர்தல் ஆணைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவருக்கு கீழ், ஆறு துணைத் தலைவர்கள் அடங்கிய நிர்வாகக் குழு உள்ளது. துணைத் தலைவர் 3 வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார். தேவைப்பட்டால் மேலும் 2 வருடங்கள் வழங்கப்படும்.
இதனிடையே, லவாசாவின் இந்திய தேர்தல் ஆணைய பதவி நிறைவடைய இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த மூத்த தேர்தல் ஆணையராக உள்ளார். தேர்தல் ஆணையத்தில் பணியாற்றினால், 2022 அக்டோபரில் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.