காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக அசோக் கெலாட் முடிவு?

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு என தகவல்.

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, உட்கட்சி பூசல் நிலவிவரும் சூழலில், தலைவர் போட்டியில் இருந்து விலக கெலாட் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்கும் சோனியா காந்தியின் முடிவை ஏற்காததால் அசோக் கெலாட் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தவிடாமல் கெலாட் ஆதரவாளர்கள் தடுத்து பைலட் முதல்வராக கூடாது என வலியுறுத்தியிருந்தனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்காக தேர்தலின் வாக்குப்பதிவு  அக்.17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அக்.19-ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சமீபத்தில் அறிவித்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறியிருந்தார்.  காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலை இருக்கும்போது தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்படி அசோக் கெலாட் தனது பதிவியை ராஜினாமா செய்தால், அந்த பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்கும் சோனியா காந்தியின் முடிவை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

புதிதாக வருகிறது பாலியல் அமைச்சகம்? மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா திட்டம்.!

புதிதாக வருகிறது பாலியல் அமைச்சகம்? மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா திட்டம்.!

ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…

8 hours ago

“அன்புத்தம்பி விஜய்க்கு நன்றி” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.!

சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…

8 hours ago

தமிழ்நாட்டில் நிலநடுக்கம்.. கிராம மக்கள் பதற்றம்! எங்கு தெரியுமா?

கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…

9 hours ago

இந்த 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…

9 hours ago

தெறிக்கவிடும் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர்.!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer)…

9 hours ago

25 லட்சம் கோடி ரூபாய்.? விண்ணை முட்டிய எலான் மஸ்க் சொத்து மதிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு…

10 hours ago