குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீ நகரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்த ஏ.எஸ்.ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடமிருந்து ஏ.எஸ்.ஐ பாபு ராம் மனைவி ரினா ராணி மகன் மாணிக் அசோக் சக்ரா விருதை பெற்றுக் கொண்டனர்.
குடியரசு நாளையொட்டி வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதில் 134 போ் ஜம்மு காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
29 ஆகஸ்ட் 2020 அன்று மாலை மூன்று பயங்கரவாதிகள் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பயங்கரவாதிகள் அருகில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தனர். அந்த தீவிரவாதிகளை ஏஎஸ்ஐ பாபு ராம் கொன்றார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஏஎஸ்ஐ பாபுராம் வீரமரணம் அடைந்தார்.
பாபு ராம் 1972 மே 15 அன்று ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தர்னா கிராமத்தில் பிறந்தார்.தனது படிப்பை முடித்த பாபு ராம், 1999 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் காவலராக நியமிக்கப்பட்டார். ஜூலை 2002 இல், அவர் சிறப்பு செயல்பாட்டுக் குழுவில் சேர்க்கப்பட்டார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…