11 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா ..!
லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் 11 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா.
உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ரா மகன் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.
இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், ஆஷிஷ் மிஸ்ரா போலீசார் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில். நேற்றுமுன்தினம் இரண்டாவது சம்மனை போலீசார் அவரது வீட்டில் ஒட்டினர். இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் ஏறக்குறைய 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது இதனை எடுத்து ஆஷிஸ் மிஸ்ரா நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவரை திங்கள்கிழமை வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.