நிர்பயா வழக்கு… கொல்லப்பட்ட குற்றவாளிகள்… ஆஷா தேவியின் சட்ட தொடர்ந்த போராட்டம்… இறுதியாக பேட்டியளித்த ஆஷா தேவி…

Default Image

மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த தேசமே அதிர்ச்சியில்  உறைந்தது இருந்தது.  அப்போதே மக்கள் கூட்டம் டெல்லியை உலுக்கி பிரமாண்ட தன்னெழுச்சி பேரணியை பொதுமக்கள் தொடங்கினர். அன்று தொடங்கியது நிர்பயாவின்  தாயார் ஆஷாதேவியின் பயணம். இவர்,  பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே தீர்வு. எப்போதுதான் இந்த கயவர்களை தூக்கிலிடுவீர்கள்? என கண்ணீரும் கம்பலையுமாக கதறினார். நிர்பயா பலாத்கார வழக்கில் ஏற்கனவே 3 முறை குற்றவாளிகளைத் தூக்கிலிட தேதி குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்திய அரசியலமைப்பில் எத்தனை  வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனையையும் நிர்பயாவின் குற்றவாளிகள் பயன்படுத்தினர்.

 

Image result for ஆஷா தேவி

அப்போதெல்லாம் மனச்சோர்வையும் குமுறலையும் கொட்டி கொட்டி அழுதவர் ஆஷாதேவி.  4-வது முறையாகவும் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான  நாள் வெள்ளிக்கிழமை மார்ச் 20-ந் தேதி அதிகாலை 5.30 மணி என நாள் குறிக்கப்பட்டது. முந்தைய வியாழன் இரவு தொடங்கி அதிகாலை வரை நீதியின் கதவுகளை மீண்டும் நிர்பயா குற்றவாளிகள் தட்ட தொடங்கினர். அந்த நள்ளிரவிலும் நீதிமன்றங்களுக்கு ஓடோடி வந்தார் ஆஷாதேவி. டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்துக்கும் ஓடி ஓடி குற்றவாளிகளின் திட்டத்தை களைத்தார் ஆஷாதேவி.
உச்சநீதிமன்றமும் தூக்கு தண்டனை கைதிகளின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஆனந்தத்தை வெளிப்படுத்திய ஆஷாதேவி தம்மை பேட்டி எடுத்த பெண் நிருபரை வாரி அணைத்து முத்தம் கொடுத்து  தனது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்பயாவின் தாயார்  ஆஷா தேவி , எனது நாடு எனக்கு நீதியை பெற்றுத் தந்துள்ளது. எனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.மேலும் அவர், இந்திய நீதித்துறைக்கும், இந்திய அரசுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்