#Breaking:எதிர்க்கட்சிகள் முழக்கம் – முதல் நாளே மக்களவை ஒத்திவைப்பு!
டெல்லி:நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.மேலும்,இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில்,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில்,நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சற்று முன்னதாக தொடங்கிய நிலையில்,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களின் இருக்கையை முற்றுகையிட்டும்,முழக்கத்தையும் எழுப்பி வந்தனர்.
இதன்காரணமாக,நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Lok Sabha adjourned till 12 noon following sloganeering by Opposition MPs
(Source: Sansad TV) pic.twitter.com/KkLFuasKk0
— ANI (@ANI) November 29, 2021