கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையானது 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது.இதனால்,பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகையில் ஊடரங்கு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று கருத்து கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி,”நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுபடுத்த முடியாத அளவுக்கு தீவிரமடைந்துள்ளது.ஆனால் இதற்கு மத்திய அரசு, உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
எனவே,கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும்,இதுவே சரியான தீர்வாகும்”, என்று கூறியுள்ளார்.
மேலும்,ஏழை மக்களுக்கு குறைந்த பட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து,அதன்பின்னர் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…