கேரளா : கடந்த ஜூலை-29 ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக வயநாட்டில் பல இடங்களில் கடும் நிலச்சரிவானது ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.
மேலும், பலர் இடிபாடுகள், நிலச்சரிவில் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியானது 5-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும், வீடுகள் இடிவதனால், மரங்கள் சாய்வதனால் போன்ற இடையூறுகளால் மீட்பு பணிகள் முடிவுக்கு வராமலே இருக்கிறது.
இப்படி ஒரு மோசமான பேரிடரை சந்தித்த வயநாடு தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ பதிவில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளின் பாதைகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை காணலாம்.
மேலும், அதிக பாதிப்புகளை சந்தித்த சூரல்மலையில் உள்ள பெய்லி பாலத்தில் அங்குள்ள மக்கள் அங்கும் இங்கும் பாலத்தை கடந்து செல்வதை காணலாம், மழையும் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் இன்னும் ஒரு சில தினங்களில் வயநாடு முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…