இயல்பு நிலைக்கு திரும்பும் வயநாடு.! வெளியான பிரத்யேக வீடியோ பதிவு.!

Wayanad Landslide Rescue

கேரளா : கடந்த ஜூலை-29 ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக வயநாட்டில் பல இடங்களில் கடும் நிலச்சரிவானது ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

மேலும், பலர் இடிபாடுகள், நிலச்சரிவில் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியானது 5-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும், வீடுகள் இடிவதனால், மரங்கள் சாய்வதனால் போன்ற இடையூறுகளால் மீட்பு பணிகள் முடிவுக்கு வராமலே இருக்கிறது.

இப்படி ஒரு மோசமான பேரிடரை சந்தித்த வயநாடு தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ பதிவில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளின் பாதைகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை காணலாம்.

மேலும், அதிக பாதிப்புகளை சந்தித்த சூரல்மலையில் உள்ள பெய்லி பாலத்தில் அங்குள்ள மக்கள் அங்கும் இங்கும் பாலத்தை கடந்து செல்வதை காணலாம், மழையும் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் இன்னும் ஒரு சில தினங்களில் வயநாடு முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்