தமிழுக்கு இடம் கேட்டதால் COWIN இணையப்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியை தவிர மற்ற மொழிகள் நீக்கம்…!

Default Image

கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படாததற்கு  கண்டனங்கள் எழுந்த நிலையில், அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிராந்திய மொழிகளில், தமிழ், கன்னடம்,மலையளம் போன்ற அனைத்து மாநில மொழிகளிலும், இந்த இணையதளம் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவின் என்ற இணைய பக்கத்தில், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பல அரசியல் பிரபலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி  சேர்க்கப்படாததற்கு  கண்டனங்கள் எழுந்த நிலையில், அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்