கொரோனா பாதிப்புகள்.! விமான போக்குவரத்தில் எந்த மாறுதலும் இல்லை.! நிதி ஆயோக் அறிவிப்பு.!
விமான போக்குவரத்தில் தற்போது வரை எந்த மாறுதலும் இல்லை. – நிதி ஆயோக் குழுவின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால்.
தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் உருவெடுக்க தொடங்கி உள்ளன. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியது
மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் வருமா.? விமான சேவை கட்டுப்பாடுகள் இருக்குமா என்ற ஐயம் பலரது மனதில் எழுந்தது. தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிதி ஆயோக் குழுவின் சுகாதார பிரிவு உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், விமான போக்குவரத்தில் தற்போது வரை எந்த மாறுதலும் இல்லை. அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி இயங்கும் என நிதி ஆயோக் குழுவின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் , கொரோனா மீண்டும் தொடங்க ஆரம்பித்த காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.