நான் உயிருடன் இருக்கும் வரை பாஜக உள்ளே வர முடியாது – மம்தா பானர்ஜி

Default Image

மேற்குவங்கம்: கலவரங்களை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.நான் உயிருடன் இருக்கும் வரை, நான் பாஜகவை இங்கு அனுமதிக்க மாட்டேன் மம்தா பானர்ஜி காட்டம்.

மேற்குவங்கத்தில் சிலமாதங்களில் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தை போல் நடக்க இருக்கிறது.இந்நிலையில் வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை கூறுகையில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவது கலவரங்களை ஊக்குவிப்பதாகும் என்று கூறினார்.

மால்டாவில் நடந்த பொதுப் பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவது என்பது கலவரங்களை ஊக்குவிப்பதாகும். கலவரங்களை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களிக்கவும்…மம்தாவை தனி ஆளாக இல்லாததால் நீங்கள் தோற்கடிக்க முடியாது, அவளிடம் உள்ளது மக்களின் ஆதரவு … நான் உயிருடன் இருக்கும் வரை, நான் பாஜகவை இங்கு அனுமதிக்க மாட்டேன் என்றார். “

அதன் பின்னர் புதன்கிழமை மம்தாவின் கருத்துக்களுக்கு  பதிலளித்த வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கர், மம்தா அரசாங்கத்தை கடுமையான விமர்சனம் செய்தார் , நிர்வாகத்தின் செயல்பாட்டு நேரம் குறித்து தனது கவலைகளை எழுப்பிய அவர்,இங்கே மிகவும் பயம் இருக்கிறது.

நீங்கள் அதைப் பற்றி பேசக்கூட முடியாது. நான் இங்கு வந்ததிலிருந்து இதைப் பற்றி குரல் கொடுத்து வருகிறேன்.இதை இனியும்  கூட மறைக்க முடியுமா ? பயமும் ஜனநாயகமும் ஒன்றிணைந்து இருக்க முடியாது என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்