சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அறிவதில் சிக்கல்..! மாற்று வழியை அறிவித்த சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது.தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in எனும் வலைத்தளத்தில் தங்களின் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக சிபிஎஸ்இ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளிகளிலேயே முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது சிபிஎஸ்இ.
As informed by NIC there is a technical issue in accessing cbse results. The same is likely to resume in two hours . However , complete results have been sent to all schools and students can obtain their results from schools. The results are also being pushed through Digilocker
— CBSE HQ (@cbseindia29) July 13, 2020