போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜர்!

போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜராகியுள்ளார்.
சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிரபல திரை உலக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 8ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என இரண்டு முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அவை இரண்டும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு கொடுத்திருந்தார். இந்த ஜாமீன் மனுவிற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 14 நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் ஆரியன் கானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிபந்தனைகளில் ஒன்றாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உட்பட்ட சில நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டது. அதன்படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தனது வழக்கறிஞருடன் இன்று ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார்.