அரவிந்தர் சிங் லவ்லி திடீர் ராஜினாமா ! டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு !!

Arvinder Singh Lovely

Arvinder Singh : டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரான அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி இன்று தனது பதவியிலிருந்து திடிரென ராஜினாமா செய்துள்ளார். இவரது இந்த அதிரடி முடிவால் அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தனது ராஜினாமா செய்யும் அதிகாரபூர்வ கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அந்த கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் தகவல் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ்ஸில் மேலிடத்தில் உள்ளோர் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை எனவும் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஆம் ஆத்மீ கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி வைத்து கொள்ள மாட்டேன்  என்று காரணம் காட்டி  அரவிந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

இவர் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார், அதன் பின்பு  2017-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதை தொடர்ந்து சில மாதத்திலேயே பாஜகவின் சில சித்தாத்தங்கள் தவறானது என்று காரணம் கூறி  காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.

அதன் பிறகு அரவிந்தர் சிங் லவ்லி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார், தற்போது, இன்றைய நாளில் இத்தகைய காரணங்களை கூறி அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த இந்த திடீர் ராஜினாமாவால் டெல்லியில் அரசியல் களம் பரபரப்பாக நிலவி வருகிறது.

Arvinder Singh Lovely Resign Order
Arvinder Singh Lovely Resign Order

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்