Arvind Kejriwal: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல், பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் குவித்துள்ளனர். இன்று நாடு தழுவிய போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதனால், கெஜ்ரிவால் வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனைத்தொடர்ந்து, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜராகும்போது மீடியாக்களை பார்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சில வார்த்தைகளை கூறினார். அவர் கூறியதாவது, சிறைக்குள் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, எனது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபோன்று, நான் சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்லிவிட்டேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் கூறினார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…