EDயின் குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.. சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!

Arvind Kejriwal: அமலாக்கத்துறை மனுவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்த நிலையில், இதுதொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அமலாத்துறையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதில் மனுவும் தாக்கல் செய்திருந்தது. அதில், கெஜ்ரிவால் குறித்த பல்வேறு தகவல் வெளியாகி இருந்தது.
அதாவது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியுள்ளதாகவும், லஞ்சம் அளித்தவருக்கு சாதகமாக மதுபான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் மதுபான முறைகேடு நடந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் 170 செல்போன்கள் பயன்படுத்தியதாகவும், பின்னர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 36 பேர் சேர்ந்து அதனை அளித்ததாகவும், கெஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்த காரணத்தால் அவரை கைது செய்துள்ளோம் எனவும் அமலாக்கத்துறை கூறி இருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை மனுவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தி என்னை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை குற்றசாட்டுகள் அனைத்தும் போலியானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. அரசியல் எதிரிகளை பழிவாகுவதற்காக அமலாத்துறையை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் நேரத்தில் என்னை கைது செய்து ஆம் ஆத்மீ கட்சியை அழிக்க முயற்சித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒரு ரூபாய் கூட பெறவில்லை. இந்த கைது என்பது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதனால் தன்னை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025