டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த மே 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணமாக ஜூன் 1ஆம் தேதி வரையில் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து, ஜூன் 2ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்து இருந்தார். சிறுநீரக பிரச்சனை, திடீர் உடல் எடை குறைவு ஆகிய காரணங்களை சுட்டிகாட்டி ஜூன் 7ஆம் தேதி சரணடைய அனுமதிக்க வேண்டும் என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய கோடைகால சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு நேற்று குறிப்பிட்ட உத்தரவில் இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது என்றும், ஏற்கனவே, கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிரான மனுவில் விசாரணை முடிந்து கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு வெளியாகும் சூழல் உள்ளதால், தற்போது இதனை விசாரிக்க தேவையில்லை என குறிப்பிட்டது. இருந்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு இந்த கோரிக்கையை அனுப்பலாம் என கூறியிருந்தது.
இதனை அடுத்து, இன்று (மே 29) உச்ச நீதிமன்ற பதிவுத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கை மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் இந்த கோரிக்கையை கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…