மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாளை கொல்கத்தாவில் மாலை 3 மணிக்கு மேற்கு வங்க முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளதாக கெஜ்ரிவால் நேற்று தகவல் தெரிவித்தார். இந்த சந்திப்பில் டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக கெஜ்ரிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று கெஜ்ரிவாலை சந்தித்த நிதிஷ் குமார் இதுகுறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் 24ம் தேதி மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரேவையும், மே 25 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…