நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

Arvind Kejriwal

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஓர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வீடியோ மூலம் அவர் கூறுகையில்,  நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கு நங்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்) வருகிறோம். நீங்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை கைது செய்து கொள்ளுங்கள் என அறிவித்துள்ளார்.

மேலும் , பிரதமர் மோடி, ஜெயில் விளையாட்டு விளையாடுகிறார். நானும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகிறோம். எங்கள் அனைவரையும் நீங்கள் சிறையில் தள்ளலாம். நீங்கள் யாரை நினைக்கிறீர்களா? எல்லோரையும் சிறைக்கு அனுப்பிய பிறகும் ஆம் ஆத்மி கட்சியை உங்களால் அழிக்க முடியாது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான ராகவ் சதா, சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோர் சிறையில் அடுத்ததாக  சிறையில் அடைக்கப்படுவார்கள் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்