Arvind Kejriwal : டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நேற்று அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய நபராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என வாதிட்டது.
மேற்கண்ட காரணங்களை குறிப்பிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க 10 நாள் நீதிமன்ற காவல் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இதனை எதிர்த்து வாதிட்ட கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், அரவிந்த் கேஜிரிவால் மீது அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. அமலாக்கத்துறை தன்னிச்சையாக முன்வந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனவும், இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு முதலமைச்சரை இவ்வாறு கைது செய்துள்ளனர் என கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நிச்சயம் நீதிமன்ற காவல் விதிப்போம் என கூறிய நீதிபதி அமர்வு, பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28வரையில் 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் விதித்து உத்தரவிட்டது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…