மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜியை இன்று மாலை 3 மணி அளவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் கொல்கத்தாவில் சந்தித்தனர்.
தற்பொழுது, மம்தா பானர்ஜியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக கெஜ்ரிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.