Arvind Kejriwal letter to AAP workers [file image]
Arvind Kejriwal : நம் முன்னே பெரிய சக்தி ஒன்று இருக்கிறது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு சிறையில் இருந்தபடி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். புதிய மதுபான கொள்கை வழக்கில் நேற்று முன்தினம் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், மார்ச் 28 வரை 6 நாட்கள் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நான் சிறையில் இருந்தாலும் சமூக பணிகளை நிறுத்தக்கூடாது என்று சிறையில் இருந்தபடி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ளார். இந்த கடிதம் குறித்து கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்தார்.
அந்த கடிதத்தில், இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் பல சக்திகள் நாட்டை பலவீனப்படுத்தி வருகின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும். கெஜ்ரிவால் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார் என்று டெல்லி பெண்கள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். தங்கள் சகோதரனையும், மகனையும் நம்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என்னை நீண்ட காலம் சிறையில் அடைக்க எந்த சிறையும் இல்லை. நான் சீக்கிரம் வெளியே வந்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். நான் சிறைக்குச் செல்வதோடு நின்றுவிடக் கூடாது. அதாவது நான் சிறையில் இருப்பதால், சமூக, பொதுநல பணிகளை நிறுத்தக்கூடாது, தொடர்ந்து செய்ய வேண்டும். என்னுடைய கைது நடவடிக்கையால் பாஜகவினரை வெறுக்க வேண்டாம். அவர்களும் நம் சகோதர, சகோதரிகள் தான். எனவே நான் விரைவில் திரும்பி வந்து பணிகளை தொடர்வேன் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…