பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் விவகாரம் குறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கல்வி தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கேள்வி எழுப்பு வருகிறார். மேலும், அவருடன் பயின்ற மற்ற தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார். ஆனால் அது மூன்றாம் தரப்பினர் அடையாளத்தை வெளியிடும் உரிமை என கூறி குஜராத் பல்கலைக்கழக அதிகாரிகள் விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டில், கேட்கப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் தான் வருகிறது. எனவே கேட்கப்பட்ட தகவல்களை வழங்குமாறு குஜராத் பல்கலைகழகத்திற்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில், மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜிரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நீதிமன்ற உத்தரவு எதிர்த்து தற்போது குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வழக்கு விசாரணையானது இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…