எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வாங்கினால் ரூ .30,000 வரை ஊக்கத்தொகை -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Default Image

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள்வாங்கினால் ரூ .30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தீபாவளி டெல்லி புகைமூட்டத்துடன் போராடுவதற்கு தொடங்கும் காலத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக டெல்லி மின்சார வாகனக் கொள்கையை தொடங்கினார்.

இந்தக் கொள்கையின் கீழ், அரசு பதிவு கட்டணம் மற்றும் சாலை வரியை தள்ளுபடி செய்யும். மேலும், தேசிய தலைநகரில் புதிய கார்களுக்கு ரூ .1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கும் என்று தெரிவித்தது .

மேலும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் இ-ரிக்‌ஷாக்களுக்கு ரூ .30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும், கார்களுக்கு ரூ .1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தக் கொள்கையை அறிமுகப்படுத்திய பின்னர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் புதிய மின்சார வாகனங்கள் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று டெல்லி அரசு தெரிவித்தது. மின்சார வாகனக் கொள்கையின் கீழ் ‘ஸ்கிராப்பிங் ஊக்கத்தொகை’ அளித்து ஒரு வருடத்தில் 200 சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்