அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புரி தொகுதியில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி கண்டுள்ளனர்.
![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன.
கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடிய ஆம் ஆத்மிக்கு இந்த முறை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ஆட்சியை இழக்கும் சூழலில் முன்னணி முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் ஆம் ஆத்மி தலைவரும் 3 முறை (2013, 2015, 2020) முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்த முறை தனது சொந்த தொகுதிலேயே தோல்வியை தழுவியுளளார்.
கடந்த 2013-அப்போதைய டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்-ஐ எதிர்த்தும், அடுத்து 2015, 2020 என தொடர்ந்து 3 முறை வெற்றிவாகை சூடிய புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதிர்ச்சியை தோல்வியை தழுவியுள்ளார். இது ஆம் ஆத்மி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அங்கு, முன்னாள் பாஜக எம்பி பர்வேஷ் சாகிப் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
அதே போல, டெல்லி மாநிலம் ஜங்புரி சட்டமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா தோல்வி கண்டுள்ளார். அங்கு பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வா வெற்றி பெற்றுள்ளார்.