அமலாக்கத்துறை 6-வது சம்மனுக்கும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்..!
டெல்லி அரசு புதிய கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனால் விசாரணைக்கு ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதுவரை 5 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனக்கு அனுப்பப்படும் அனைத்து சம்மன் சட்டவிரோதமானது என கூறி வருகிறார். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் விசாரணை நடத்த இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகவில்லை. வழக்கம் போல சம்மன் சட்ட விரோதமானது என்று டெல்லி முதல்வர் தெரிவித்தார்.
நாளை பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு செல்கிறார்..!
இதுகுறித்து ஆம் ஆத்மி தரப்பில் கூறுகையில்” கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மன் “சட்டவிரோதமானது” என்று மீண்டும் வலியுறுத்தியதோடு, இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. அமலாக்கத்துறை தானே நீதிமன்றத்தை அணுகியது. மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறினர்.