Categories: இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு – அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கைதை தொடர்ந்து மார்ச் 28ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அளிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது வரை அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரியும் மற்றும் காவலில் வைத்து விசாரிக்கும் உத்தரவுக்கு எதிராகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கெஜ்ரிவாலின் கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்றும் அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும்  அவரது வழக்கறிஞர் குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கைது மற்றும் காவலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடைக்கால நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, டெல்லி அமைச்சர்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுடன் இணைந்து டெல்லி சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

7 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

8 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

9 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

9 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

9 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

10 hours ago