நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.!
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய வரி பகிர்வு, சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அனைவருக்கும் வழிகாட்டியாக மன்மோகன் சிங் திகழ்கிறார்.! பிரதமர் மோடி புகழாரம்.!
நேற்று கர்நாடக அரசு சார்பில அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கர்நாடக அரசுக்கு அளிக்க வேண்டிய வரிப்பகிர்வு பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என வலியறுத்தப்பட்டது.
அதே போல இன்று அதே டெல்லி, ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள மாநில அரசு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் , கேரள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்துகொண்டனர். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார்.
அப்போது அந்த போராட்டத்தில் கெஜ்ரிவால் பேசுகையில், அமலாக்கத்துறையை இப்போது மத்திய அரசு ஒரு புதிய ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. இதுவரை, ஒரு நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பிறகு தான் அவர் சிறைக்கு அனுப்பப்படுவார். ஆனால் இப்போது, அவர்கள் (பாஜக) யாரை அனுப்ப வேண்டும் என முடிவு செய்கிரார்களோ அவர்கள் சிறைக்கு செல்கிறார்கள்.
அதன் பிறகுதான் அந்த நபர் மீது எந்த வழக்கு போடுவது என்று யோசிக்கிறார்கள். வழக்கு தொடங்காத நிலையில் தான் முன்னாள் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை என்னை அவர்கள் சிறையில் போடலாம். அடுத்து பினராயி விஜயன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் சிறையில் அடைக்கப்படலாம். அதன் மூலம் மாநில அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள் என ஆளும் பாஜக அரசை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.