இந்தியாவின் புதிய மாநிலமாக அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டதன் 34-ம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சி அருணாச்சல பிரதேச தலைநகர் இட்டாநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு தொழிற்சாலைகள், சாலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த 34வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அமித் ஷா, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதில், ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். வட கிழக்கு மாநிலங்களில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் அனைத்துக்கும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் தீர்வு காணப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…