இருந்த ஒருவரும் குணம்..அருணாச்சல பிரதேசம் கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது.!
இந்தியாவில் அருணாச்சல பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவு காரணமாகி உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து போர் தொடுத்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதாரத்தில் பல நாடுகள் சரிவை கண்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 21,83,942 பேர் பாதிக்கப்பட்டு, 1,46,873 உயிரிழந்துள்ளார்கள். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,52,822 பேர் குணமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தினந்தோறும் பாதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 13,387 பேர் பாதிக்கப்பட்டு, 437 பேர் பலியாகியுள்ளார்கள். 1,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 3,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 194 பேரை கொன்றுள்ளது. இதனிடையே அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட பூர்ண குணமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பேமா காண்டு அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் அருணாச்சல பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
The first Positive case of Arunachal has tested Negative (twice) after conducting 3rd & 4th test consecutive.
The #Covid_19 Positive case in Arunachal Pradesh is now ‘0’. #IndiaFightsCorona #StayHomeStaySafe @MoHFW_INDIA @DDNewslive @ZeeNews
— Pema Khandu (@PemaKhanduBJP) April 16, 2020