அருண் ஜெட்லி இறுதி சடங்கில் பாஜக எம்பி சுப்ரியோ உட்பட 11 பேரின் செல்போன் திருட்டு ..!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டார். ஆனால் கடந்த 24-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதிசடங்கில் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது பாஜக எம்பி சுப்ரியோ உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றதாக காஷ்மியர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவு கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை என காஷ்மியர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.