டெல்லியில் அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
நேற்று டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதனையடுத்து அருண்ஜெட்லி உடல் ஊர்வலமாக கொன்டுவரப்பட்டது.பின்னர் நிகம்போத் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அருண் ஜெட்லி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.இறுதியாக முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…