நாளை அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லியின் உடல்.
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் அருண் ஜெட்லியின் உடல் இன்று மாலை டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.மேலும் நிகம்போத் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…