பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது- மத்திய அமைச்சர் அருண் ஜெட்லீ
வர்த்தகத்துக்கு உகந்த நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லீ செய்தியாளர்களிடம் கூறுகையில்,வர்த்தகத்துக்கு உகந்த நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியான எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லீ.