அருண் ஜெட்லி நினைவு தினம்.. பிரதமர் மோடி இரங்கல்..!
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கடந்த ஆண்டு டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
பிரதமர் மோடி இன்று காலை அருண் ஜெட்லிக்கு தனது முதல் ஆண்டு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திவிட்டுள்ள பதிவில் ” இந்த நாளில், கடந்த ஆண்டு, ஸ்ரீ அருண் ஜெட்லி ஜியை இழந்தோம். நான் என் நண்பனை இழக்கிறேன். அருண் ஜி இந்தியாவுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். அவரது அறிவு, புத்தி, சட்ட புத்திசாலித்தனம் மற்றும் அன்பான ஆளுமை ஆகியவை புகழ்பெற்றவை.
அவரது நினைவாக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தின் போது நான் பேசிய ஒரு பழைய வீடியோ ஓன்று உள்ளது” என கூறி அவர் பேசிய வீடீயோவையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இறந்தபோது இறுதி மரியாதை செலுத்த முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
அவர் அனைவராலும் விரும்பப்பட்டார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் அவர் நீண்ட காலமாக சுவாச பிரச்சினைகளை கொண்டு இருந்தார். இருப்பினும், கடைசி நாள் வரை, அவர் ஒருபோதும் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசவில்லை. அவர் தேசிய பிரச்சினைகள், நாட்டின் எதிர்காலம் குறித்து அதிக அக்கறை கொண்டிருந்தார் ” என்று பிரதமர் மோடி அந்த வீடீயோவில் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ 14 நிமிட கொண்டது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு அருண் ஜெட்லி இறக்கும் போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
On this day, last year, we lost Shri Arun Jaitley Ji. I miss my friend a lot.
Arun Ji diligently served India. His wit, intellect, legal acumen and warm personality were legendary.
Here is what I had said during a prayer meeting in his memory. https://t.co/oTcSeyssRk
— Narendra Modi (@narendramodi) August 24, 2020