மக்களின் உணர்வுக்காக நிதி வழங்க முடியாது என ஜெட்லி கூறினார்?
மாநிலத்தின் நலனை பாதுகாக்கும் விதமாகவே நாங்கள் பா.ஜ.க , கூட்டணியிலிருந்து விலகினோம் என ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார் . என்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக கூட்டணியிலிருந்து விலகவில்லை. மாநிலத்தின் நலனுக்காக வெளியேறினேன். மத்திய அரசு கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஆனால், ஆந்திரா தொடர்பாக அதில் எதுவும் இல்லை. ஆந்திரா பிரிக்கப்பட்ட போது, வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சட்டத்தில் சிறப்பு அந்தஸ்து இடம்பெற்று உள்ளது.
ஆனால், வழங்கப்படவில்லை. மக்களின் உணர்வுக்காக நிதி வழங்க முடியாது என ஜெட்லி கூறியுள்ளார். அவருடைய கருத்து பொறுப்பற்ற அறிக்கையாகும். மக்களின் உணர்வு காரணமாகவே தெலுங்கானா உருவாகியது. மக்களின் உணர்வுகள் மதிப்புடையது. நீங்கள் இப்போதும் அநீதியை இழைத்து கொண்டுள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.