ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள் ஆக.2 முதல் தினசரி விசாரிக்கப்படும் என அறிவிப்பு.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம்தோறும் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்த நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம்தோறும் வழக்குகளின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக 23 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆகஸ்ட் 2 முதல் விசாரிக்கப்பட உள்ளது.
இதனிடையே, இந்திய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவு (Article370) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ல் மத்திய அரசு ரத்து செய்தது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 23 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த சூழலில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் நேற்று மத்திய அரசு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள் தினசரி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…