அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் வரும் 24-ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்கள். குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்துக்கு வரும் அவரை, பிரதமர் மோடி வரவேற்கிறார். இங்கிருந்து இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். பிறகு மோட்டேரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் என்ற கிரிக்கெட் ஸ்டேடியதுக்கு செல்கின்றனர். அங்கு பிரதமர் மோடி நமஸ்தே ட்ரம்ப் என்ற தலைப்பில் வரவேற்பு அளிக்கிறார். இந்நிலையில், ட்ரம்ப் பங்கேற்கும் அந்நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக ட்ரம்ப் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அகமதாபாத்தில் தன்னை 70 லட்சம் பேர் திரண்டு வரவேற்கவுள்ளதாக உற்சாகமாக கூறினார். அகமதாபாத் மொத்த மக்கள் தொகையே 80 லட்சம் பேர் என்பதால் 70 லட்சம் பேர் எப்படி வரவேற்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகையில், அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 22 கி.மீ. சாலை வழிப் பயணத்தில் வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வருவது உறுதியாகி உள்ளது. இந்திய கலாச்சாரத்தை காட்டுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ட்ரம்ப் வருகை தொடர்பாக குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி, காந்தி நகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் ட்ரம்ப் வருகையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் குறித்து தெரிவித்தார். பின்னர் வழியெங்கும் ட்ரம்ப் செல்கிற பாதையில் மேடைகள் அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பின்னர் அவரை வரவேற்க 2 லட்சம் பேர் வருவார்களா என அவர் தெரிவித்தார்.
சென்னை :மழைக்கு சூடா சுடச்சுட பஜ்ஜி சாப்பிடனுமா? வாங்க சட்டுனு பஜ்ஜி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.. தேவையான பொருட்கள்; வாழைக்காய்=…
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு…
சென்னை : தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு…
டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை…