காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதே நேரத்தில் ராணுவம் வீரர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது சந்தேகப்படும் படியான 2 நபர்களை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர்.
நவீத் பாபா, ரபி அகமது ஆகிய இரண்டு பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் அவர்களை ஸ்ரீநகர் போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் சோபியான் மாவட்டத்திலிருந்து தப்பி செல்ல காரில் அழைத்துச் சென்றார் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து டி.எஸ்.பி தேவீந்தர் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யப்பட்ட தேவீந்தர் சிங் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் காஷ்மீர் மாநிலத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியில் தேவீந்தர் சிங் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …