6 வாகனகளுக்கு சத்தீஸ்கரில் தீவைத்த நக்சலைட்டு கைது !
ஜார்கண்ட் – சத்தீஸ்கரில் எல்லைக்கு அருகே 6 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் தொடர்புடைய நக்சலைட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட்-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே பால்கம்பூரில் உள்ள பாக்சைட் சுரங்கத்தில் ரயில் பாதை கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக நக்லைட்டு ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.
source: dinasuvadu.com