விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது.
விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFi-யை பயன்படுத்துவது குறித்த கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்தது .அதனை தொடர்ந்து தற்போது விமான பயணத்தின் போது WiFi-யை பயன்படுத்துவதற்கு புதிய சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . தற்போது அதன் வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான அனுமதியை குறிப்பிட்ட விமானத்தை இயக்கும் விமானியிடம் பெற வேண்டும் .மேலும் விமானங்கள் மூவாயிரம் அடி உயரத்துக்கு பறந்த பின்னர் தான் பயணிகள் WiFi-யை பயன்படுத்த முடியும்.
விமானம் மூவாயிரம் அடி உயரத்திற்கு பறந்த பின்னர் பிளைட் மோடில் மட்டுமே செல்போன்கள், லேப்டாப் , ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வரைவு விதிமுறைகளை குறித்த குற்றச்சாட்டுகளையும், கருத்துகளையும் முப்பது நாட்களுக்குள் அனுப்பும்படியும் கேட்டு கொண்டுள்ளனர்.
சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…