வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசி சான்றிதழை பெற ஏற்பாடு…!
2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்பவர்கள், கோவின் செயலியில் தங்களது பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக அதற்கான சான்றிதழை பெற்று கொள்ளலாம்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை தடுக்கும் வண்ணமாக, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடு செல்பவர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே, மற்ற நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனையடுத்து, வெளிநாடு செல்பவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்பவர்கள், கோவின் செயலியில் தங்களது பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக அதற்கான சான்றிதழை பெற்று கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.