டெல்லி: மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் (ஜூன் 1) நிறைவுற்றதை அடுத்து, நாளை (ஜூன் 4) ஒரே நாளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் நாளை வரையில் தேர்தல் விதிமுறைகள் இந்தியா முழுக்க அமலில் உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்ல கூடாது. மற்ற பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு மது போன்ற போதை பொருட்கள் அளிப்பதற்கான தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் விதிகள் அமலில் இருந்த போது 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், பரிசு பொருட்கள், இலவசங்கள், ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்த தேர்தல் கண்காணிப்பில் 68 ஆயிரம் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும், 1.5 கோடி பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர் என்றும் ராஜீவ் குமார் கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையம் மீது சிலர் அவநம்பிக்கை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் காணவில்லை என்ற மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் போகவில்லை இங்கு தான் இருக்கிறோம். இந்த தேர்தலில் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம், கோடை காலத்துக்கு முன்னர் தேர்தல் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…