ஜாமீன் வழங்க மறுப்பு.. ஜாமீன் கேட்டு அலிபாக் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனு!
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி, ஜாமீன் கோரி அலிபாக் கீழமை நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அர்னாப்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த அர்னாப் கோஸ்வாமியை நேற்று காலை போலீஸ் வேனில் தலோஜா மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் விசாரணை இன்று மும்பைக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையிலேயே இருக்குமாறும், மாறாக கோஸ்வாமி ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி, ஜாமீன் கோரி அலிபாக் கீழமை நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.