Today’s Live: மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பான விவகாரம்..! பஞ்சாப் மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு..!

LIVE-NEWS

கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி ஆகியோரின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தொடங்கியது. இதில் மாநில தலைவர் கமல்நாத், திக்விஜய சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

29.05.2023 12:16 PM

காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு:

ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் தற்போது பஞ்சாப் மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகின்றனர். டெல்லி அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸின் ஆதரவை ஆம் ஆத்மி கோரும் விவகாரம் விவாதிக்கப்படுகிறது.

29.05.2023 12:05 PM

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியது. IAF இன் Apache AH-64 ஹெலிகாப்டர், வழக்கமான செயல்பாட்டு பயிற்சியின் போது, பிந்த் அருகே முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியது. அனைத்து பணியாளர்களும் விமானமும் பாதுகாப்பாக உள்ளனர்.

29.05.2023 11:20 AM

40 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவம்:

மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில், 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்தனர். வீடுகள், வழிபாட்டுத் தலங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவப் படைகளை ஒன்றிய அரசு அனுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

29.05.2023 09:20 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்