லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மோடி, நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என கூறினார்.
மேலும், ராணுவ வீரர்கள் மீது மகத்தான நம்பிக்கை உள்ளது. மொத்த நாடும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஒரே சமயத்தில் பல முனைக்களுக்கு செல்லக் கூடிய திறன் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உள்ளது. நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும். எல்லைப் பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகளால் ரோந்து திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முப்படைக்கு தேவையான போர் விமானங்கள், நவீன ஹெலிகாப்டர்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…