ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதியாக ஒருவரை நியமிப்பது தொடர்பாக, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.
தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, காலியாக உள்ள ராணுவ தளபதி பதவிக்கு மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் ராணுவ தளபதியாக பதவியேற்றுக்கொண்டார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயாராகவே உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் அதன் அச்சுறுத்தல் என்ன என்பதை உணர்ந்து வருகின்றன .370வது பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு-காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் சரிவைக் கண்டுள்ளன என்று ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…