மிசோரமில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம்!
மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 14 பேரில் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்.
தற்பொழுது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லெங்புய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 10.19 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தகவலின்படி, மியான்மர் இராணுவத்திற்கும் சிவிலியன் இராணுவத்திற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக லாங்ட்லாய் மாவட்டத்தில் தஞ்சம் அடைந்த ராணுவ வீரர்களை மீட்க இந்த விமானம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேதாஜியின் 127வது பிறந்தநாள் : நடைப்பயணத்தில் ராகுல்காந்தி மரியாதை.!
கடந்த வாரம் மொத்தம் 276 மியான்மர் வீரர்கள் மிசோரமுக்குள் நுழைந்தனர், அதில் 184 மியான்மர் வீரர்களை இந்தியா திங்களன்று அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியது. மீதமுள்ள 92 வீரர்கள் செவ்வாய் கிழமை நாடு கடத்தப்பட உள்ளனர்.