ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்காக அத்தியாவசிய தேவைகளுக்காக இராணுவம் ஆதரவு வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி ராணுவத்தை நாடியுள்ளார்.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இதனையடுத்து, 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான பாலங்கள், வீடுகள், மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தனர்.
இந்த புயலால் 80-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக மேற்கு வங்கம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர், மோடி மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடியும் , ஒடிஷாவிற்கு ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கினார். மேலும், புயலால் படுகாயம் அடைந்தோருக்கு ரூ.50,000 நிதி வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவைக்கபட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் மற்றும் குடிநீர் குழாய்களை சீக்கிரமாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், நெருக்கடி உள்ள பகுதிகளில் குடிநீர்களை வழங்குமாறு பொது சுகாதாரத்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் புயலால் சூறையாடப்பட்ட மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட இராணுவம் ஆதரவு வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ராணுவத்தை உதவியை நாடியுள்ளனர். எல்லாவற்றையும் விரைவில் சரிசெய்த பின்னர் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய…